Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

போக்குவரத்து நெரிசலா?முன்கூட்டியே புறப்படுங்கள்!: பிலிப்பீன்ஸ் அரசாங்கம்

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் கடுமையாகிவரும் வாகன நெரிசல், ரயில் சேவைத் தடங்கல்-ஆகியவற்றால் பயணிகள் விரக்தியடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
போக்குவரத்து நெரிசலா?முன்கூட்டியே புறப்படுங்கள்!: பிலிப்பீன்ஸ் அரசாங்கம்

(படம்: Reuters)

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் கடுமையாகிவரும் வாகன நெரிசல், ரயில் சேவைத் தடங்கல்-ஆகியவற்றால் பயணிகள் விரக்தியடைந்துள்ளனர்.

இந்த நேரத்தில் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டேயின் பேச்சாளர் தெரிவித்துள்ள கருத்து மக்களுக்குச் சினமூட்டியிருக்கிறது.

போக்குவரத்து நெரிசல் என்றால் முன்கூட்டியே புறப்பட்டுப் போகவேண்டியதுதானே ? என்று திரு. பனேலோ கேட்ட கேள்வியைப் பலரும் ரசிக்கவில்லை.

அதிபரின் பேச்சாளர் எந்த உலகத்திலிருக்கிறார் என்று கேட்கின்றனர் பலரும்..

மாணவர்கள் கல்லூரிக்குச் செல்ல தினமும் 3 மணி நேரம் பிடிக்கிறது மணிலாவில்.

அண்மையில் அங்கே மூன்று பெரிய ரயில் சேவைத் தடங்கல் ஏற்பட்டு நிலைமை மேலும் தீவிரமடைந்திருக்கிறது.

இந்தச் சூழலில் பிலிப்பீன்ஸ் அரசாங்கம் அமெரிக்காவின் ராணுவம் பயன்படுத்திய பழைய விமானம் ஒன்றைச் சுமார் 40 மில்லியன் வெள்ளி செலவில், அதிபரின் தனி விமானமாகப் பயன்படுத்த வாங்கியிருக்கிறது.

அது அடுத்த ஆண்டு மணிலாவிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது.

பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது அதிபரும் அவரது நிர்வாகத்தினரும் அதிவிரைவு விமானங்களை வாங்கி சொகுசாகப் பயணம் மேற்கொள்வதா என்று பொருமுகின்றனர் பொதுமக்கள்.

இந்த நேரத்தில், பொதுமக்களைக் கிண்டல் செய்வதுபோல், திரு. பனேலோ வெளியிட்ட கருத்து மக்களுக்கு மேலும் சினமூட்டியுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்