Images
  • manilla floods (1)
    (படம்: REUTERS)

பிலிப்பீன்சில் கனத்த மழை - வெள்ள அபாயத்தால் மக்கள் இடமாற்றம்

கனமான பருவமழை காரணத்தால் பிலிப்பீன்ஸ் தலைநகரம் மணிலாவில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதையொட்டி 54,000க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மனிலாவிலிருந்தும் அருகில் இருக்கும் வட்டாரங்களிருந்தும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதுவரை நீரின் மட்டம் மார்பளவுக்கு வந்துள்ளது. இதனால் நகரெங்கும் சாலைகளைப் பயன்படுத்த முடியவில்லை.

நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருப்பதாக மேயர் மார்செலினோ டியோடோரோ (Marcelino Teodoro) கூறினார்.

ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

2009ல் ஏற்பட்ட கெட்சானா சூராவளியில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

Top