Images
  • Maria Ressa
    (படம்: AFP/MARIA TAN)

பிலிப்பீன்ஸ்: அவதூறு பரப்பிய குற்றச்சாட்டால் Rappler செய்தி தலைமை நிர்வாக அதிகாரி கைது


பிலிப்பீன்ஸைத் தளமாகக் கொண்டு செயல்படும் Rappler செய்தி இணையத்தளத் தலைமை நிர்வாக அதிகாரி மரியா ரெஸ்ஸாவை (Maria Ressa) அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திருவாட்டி ரெஸ்ஸா, இணையத்தில் அவதூறு பரப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அரசாங்க அதிகாரிகள் நேற்று நீதிமன்றம் மூடும் வேளையில், கைதாணை பிறப்பித்ததாக Rappler தகவல் வெளியிட்டுள்ளது.

திருவாட்டி ரெஸ்ஸா மீது சென்ற வாரம் குற்றஞ்சாட்டப்பட்டதாக பிலிப்பீன்ஸ் நீதித் துறை தெரிவித்தது.

அதிபர் ரோட்ரிகோ டுடார்ட்டேயின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சனம் செய்த சில செய்தி நிறுவனங்களில் Rapplerஉம் அடங்கும்.

போதைப் பொருளுக்கு எதிரான அதிபரின் நடவடிக்கைகளால் பல்லாயிரக் கணக்கான சந்தேக நபர்கள் மாண்டதை அவை குறைகூறின.

கைதான திருவாட்டி ரெஸ்ஸா, தேசியப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

அவர் மீது சுமத்தப்பட்ட அவதூறுக் குற்றச்சாட்டு, அரசியல் நோக்கம் கொண்டது என்று மனித உரிமைக்கான Amnesty International அமைப்பு ஏற்கனவே கண்டனம் செய்திருந்தது.

ஊடக விமர்சனக் குரலை நசுக்கும் நோக்கில் விடுக்கப்படும் மிரட்டல், துன்புறுத்தல்கள் ஆகியவற்றிலிருந்து யாரும் தப்புவது இல்லை என்று Rappler அதன் அறிக்கையில் எச்சரித்துள்ளது.

Top