Images
  • fb
    படம்: Facebook/amir.z.zulkifly

'நான் அவன் இல்லை'... என்னைப்போல் அவன்

உலகில் ஒருவரைப் போலவே 7 பேர் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

அது உண்மையோ இல்லையோ, மலேசியாவில் ஒருவர் தன்னைப் போன்றே தோற்றம் கொண்ட இன்னொருவரைக் கண்டுபிடித்துள்ளார்.

29 வயது அஸ்லி யூசோஃப் (Azly Yusof) என்ற ஆடவர், கடந்த ஞாயிறுக்கிழமை (செப்டம்பர் 8) சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெற்ற நண்பரின் திருமணத்திற்குச் சென்றிருந்தார்.

அப்போது நடந்தது அந்த அதிசயம்..

திருமணத்தில் கலந்துகொண்டிருந்த ஓர் ஆடவர், அஸ்லியைப் போன்றே சிவப்புச் சட்டையும், மூக்குக்கண்ணாடியும் அணிந்திருந்தார்.

அது மட்டுமா.. அவரின் தோற்றமும் அஸ்லியைப் போன்றே இருந்தது.

இருவரும் நேருக்குநேர் சந்தித்துக்கொண்டபோது.... பேச வார்த்தையில்லை.

என்னைப் போல் வேறொருவரா? இல்லை கண்ணாடி பார்க்கிறேனா? இதுதான் இருவரின் மனதிலும்.

இறுதியில் இது உண்மை என்பதை உணர்ந்தபோது இருவருக்கும் உடனே சிரிப்புதான் வந்தது.

அந்தக் காட்சி பதிவுசெய்யப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

இருவருக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று Daily Mail நாளேடு தெரிவித்தது.

இது இத்தோடு முடியவில்லை. இருவரும் மீண்டும் சந்தித்துப் பேசவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.





 

Top