Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

விலை குறைந்து வரும் முகக்கவசங்கள் - சீனாவின் முகக்கவச உற்பத்தி நிறுவனங்கள் எதிர்நோக்கும் சவால்

சீனாவின் முகக்கவச உற்பத்தி நிறுவனங்கள் தற்போது குறைந்துவரும் தேவை, விலை ஆகியவற்றின் காரணமாக லாபம் ஈட்டச் சிரமப்படுகின்றன.

வாசிப்புநேரம் -
விலை குறைந்து வரும் முகக்கவசங்கள் - சீனாவின் முகக்கவச உற்பத்தி நிறுவனங்கள் எதிர்நோக்கும் சவால்

(படம்: AFP)

சீனாவின் முகக்கவச உற்பத்தி நிறுவனங்கள் தற்போது குறைந்துவரும் தேவை, விலை ஆகியவற்றின் காரணமாக லாபம் ஈட்டச் சிரமப்படுகின்றன.

சென்ற ஆண்டு இறுதியில், நோய்த்தொற்றின் ஆரம்பக்கட்டத்தில், சீனா, முகக்கவசம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறையைச் சமாளிக்க அதிகளவில் அவற்றை உற்பத்தி செய்தது.

73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முகக்கவசம் தயாரிப்பதற்குப் பதிவுசெய்து கொண்டன.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முகக்கவசங்களின் விலை தொடர்ந்து உயர்ந்ததால் அந்த மாதத்தில் மட்டும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டன.

சீனாவில் இப்போது நோய்த்தொற்று பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் முகக்கவச விலைகளும் குறைந்துள்ளன.

"ஏப்ரலிலிருந்து விற்பனை சுமார் 6 மடங்கு குறைந்துள்ளது" என்றார் CCST நிறுவனத்தின் விற்பனை இயக்குனர் யாங் ஹௌ.

மற்ற சில முகக்கவச உற்பத்தி நிறுவனங்கள் திடீரென உற்பத்தியை நிறுத்தி ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்காமல் மூடப்பட்டதால் ஊழியர்கள் பலரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

சீனா, மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை 50 பில்லியன் முகக்கவசங்களை ஏற்றுமதி செய்தது.

இருப்பினும், மற்ற நாடுகளுடன் அதன் உறவு பாதிப்படைந்துள்ளதால் சீனாவின் முகக்கவச ஏற்றுமதி குறைந்துள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்