Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் COVID-19 கிருமித்தொற்றைப் போராடும் மருத்துவ அதிகாரிகளின் முகத்தில் உழைப்பின் ரணங்கள்

சீனாவில் மருத்துவ ஊழியர்கள் COVID-19 கிருமித்தொற்றை எதிர்த்து அல்லும் பகலும் போராடி வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
சீனாவில் COVID-19 கிருமித்தொற்றைப் போராடும் மருத்துவ அதிகாரிகளின் முகத்தில் உழைப்பின் ரணங்கள்

(சமூக ஊடகத்தில் பரவும் படங்கள்)

சீனாவில் மருத்துவ ஊழியர்கள் COVID-19 கிருமித்தொற்றை எதிர்த்து அல்லும் பகலும் போராடி வருகின்றனர்.

சுவாசக் கவசங்களைப் பல மணிநேரம் அணிந்தப்பின் அவை முகத்தில் அடையாளமாக விட்டுச் செல்லும் கோடுகளுடன் சில தாதியரின் படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

அவர்களின் அயராத உழைப்பைப் பலர் புகழ்ந்து வருகின்றனர்.

சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் மருத்துவ ஊழியர்கள் நீண்ட வேலை நேரத்துடன் பல சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

மற்றவர்களுக்குச் சிகிச்கை பார்க்கும் நேரத்தில் அடிக்கடி தங்களின் பாதுகாப்புப் பற்றி நினைக்க நேரம் இல்லை என்று BBC செய்தி நிறுவனத்திடம் கூறினர் மருத்துவ ஊழியர்கள் சிலர். நோயாளிகளைப் பார்த்துக்கொள்வதே முக்கியம் என்றனர் அவர்கள்.

 சில நேரங்களில் 10 மணிநேரம் வேலை செய்யும் போது கழிப்பறைக்குச் செல்ல நேரம் இல்லையென அவர்கள் கூறினர்.

ஆனாலும் பொதுமக்கள் வழங்கிவரும் ஆதரவு அவர்களுக்கு ஓர் உந்துதலாக இருப்பதாய்க் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்