Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்திய மக்களை வாக்களிக்கத் தூண்டும் MacDonald's உணவகம்

இந்தியப் பொதுத் தேர்தலில் இன்னும் 5 கட்ட வாக்களிப்புகள் எஞ்சி இருக்கும் வேளையில், பொதுமக்களை வாக்களிக்கத் தூண்டுகிறது இந்தியாவின் MacDonald's நிறுவனம்.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

இந்தியப் பொதுத் தேர்தலில் இன்னும் 5 கட்ட வாக்களிப்புகள் எஞ்சி இருக்கும் வேளையில், பொதுமக்களை வாக்களிக்கத் தூண்டுகிறது இந்தியாவின் MacDonald's நிறுவனம்.

Facebookஇல் பரவி வரும் காணொளியில் MacDonald's உணவகம் ஒன்றில் சிலர் தங்களுக்கு விருப்பமான உணவுகளைக் கேட்கின்றனர்.

ஆனால் கடை ஊழியர்களோ அவர்கள் கேட்டதைக் கொடுக்க மறுக்கின்றனர். தாங்களாகத் தெரிவுசெய்யும் உணவை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கின்றனர்.

வியந்து நிற்கும் வாடிக்கையாளர்கள், ஏன் தாங்கள் கேட்ட உணவு கொடுக்கப்படவில்லையெனப் புகார் செய்கின்றனர்.

உணவைப் போன்றதுதான் வாக்கும்..

நீங்கள் வாக்களித்தீர்களா என்று கேட்கின்றனர் ஊழியர்கள்.

வாக்களிக்கும் உரிமையை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் அந்த உரிமை பறிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று பதில் கூறுகின்றனர் உணவக ஊழியர்கள்.

வாக்களித்த வாடிக்கையாளர்களுக்கு MacDonald's, 50 ரூபாய் சலுகை வழங்குகிறது.

வாக்களித்தவர்களின் விரலில் இடப்படும் அடையாள மையைக் கொண்டு ஊழியர்கள் அந்தச் சலுகையை வழங்குகின்றனர்.

2014இல் நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் சுமார் 64 விழுக்காட்டினரே வாக்களித்தனர்.

மக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்க, Hero MotoCorp, Subway போன்ற நிறுவனங்களும் சில சலுகைகளை அறிவித்துள்ளன.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்