Images
  • mcdonald

வெளிர் ஊதா நிற Mc Donald ஐஸ்க்ரீம்-சிங்கப்பூரில் எப்போது?

நம் உள்ளூர் மெக்டோனல்ட் (McDonald) உணவகங்களில் டுரியான், சென்டோல் (chendol), மெக் ஃபளர்ரி (McFlurry), சோளம் என்று பல சுவைகளில் ஐஸ்க்ரீம்களைச் ருசித்திருப்பீர்கள்.

ஆனால் தற்போது இன்ஸ்டாகிராமில் வலம் வந்து பலர் மனதைக் கொள்ளை கொண்டிருப்பது இந்த வெளிர் ஊதா நிற ஐஸ்க்ரீம்.

இவை அறிமுகமாகியிருப்பது ஹாங்காங்கில் உள்ள குறிப்பிட்ட சில மெக்டோனல்ட் உணவகங்களில் மட்டுமே.

சக்கரைவள்ளிக்கிழங்கின் சுவையுடன் ஓரியோ குக்கி (Oreo Cookie) வைத்து,  கூம்பில் உள்ளது ஐஸ்க்ரீம்.


ஐஸ்க்ரீமிலும் ஓரியோ பிஸ்கட் துண்டுகளின் தூள் இருக்குமாம். விலை ஹாங்காங் டாலர் 10. அதாவது சுமார் 1.75 வெள்ளி.

இது ஏற்கனவே ஓராண்டுக்கு முன் ஹாங்காங்கில் அறிமுகமாகிப் பின் மறைந்து, இப்போது மீண்டும் அறிமுகமாகியுள்ளது.


ஹாங்காங் இளையர்கள் இதை விதவிதமாகப் படமெடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துவருகின்றனர்.

என்ன நாவூறுகிறதா? சிங்கப்பூருக்கு வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
 

Top