Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: குளோரின் கலந்த தேநீர் - மன்னிப்புக்கேட்ட McDonalds

விரைவு உணவகமான McDonalds சீனப் பெண்மணிக்கு குளோரின் கலந்த தேநீரை வழங்கியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளதாய் South China Morning Post நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

விரைவு உணவகமான McDonalds சீனப் பெண்மணிக்கு குளோரின் கலந்த தேநீரை வழங்கியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளதாய் South China Morning Post நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

அதை அருந்தியதன் காரணமாக அவருக்கு வாந்தி, தொண்டை வலி, வயிற்று வலி போன்றவை ஏற்பட்டிருக்கிறது.

அவரின் செரிமான அமைப்பு குளோரினால் சேதமடைந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒரு வாய்த் தேநீரை உறிஞ்சியவுடன் அதன் சுவை வழக்கத்துக்கு மாறாக இருந்ததால் அங்கு பணிபுரியும் ஊழியரிடம் அதைப்பற்றிக் கேட்டதாக மாதின் கணவர் கூறினார்.

ஊழியர்கள் பானத்தை முகர்ந்து பார்த்துவிட்டு, மாதும் அவரது கணவரும் கவனிக்காதபோது அதைக் குப்பையில் எறிந்தனர்.

ஆனால் மாதின் கணவர் பானத்தை குப்பையிலிருந்து எடுத்தார்.

அது வேண்டுமென்றே நிகழ்ந்தது அல்ல என்று கூறி மன்னிப்புக் கேட்ட McDonalds நிறுவனம், ஊழியர்களின் பயிற்சியில் மேலும் கவனம் செலுத்தப்போவதாய்த் தெரிவித்ததாக South China Morning Post நாளேடு தெரிவித்தது.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்