Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிரபல இசைக்குழு பெயரில் உணவு -கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் இந்தோனேசியாவில் மூடப்பட்ட McDonald's உணவகங்கள்

இந்தோனேசியாவில் உள்ள சில நகரங்களில் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல், McDonald's உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவில் உள்ள சில நகரங்களில் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல், McDonald's உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

McDonald's நிறுவனம் BTS என்ற கொரிய இசைக்குழுவின் பெயரில் புதிதாக உணவுத் தொகுப்பை வெளியிட்டிருந்தது.

2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட BTS இசைக்குழுவுக்கு உலகெங்கிலும் மில்லியன்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

McDonald'sஇன் அந்த உணவுத் தொகுப்பு சென்ற மாதம் முதல் 12க்கும் அதிகமான நாடுகளில் அறிமுகம் கண்டுள்ளது.

உணவுத் தொகுப்பில் இருப்பது என்னவோ, கோழித் துண்டுகள் (nuggets), பொரித்த உருளைக்கிழங்கு (fries), குளிர்பானம் ஆகியன தான்.

இந்தோனேசியாவில் உள்ள BTS -இன் ஏராளமான ரசிகர்கள் இணையம் வழியாக அந்த உணவைப் பெறப் பதிவுசெய்திருந்ததால், கடந்த சில நாள்களாக பல உணவு விநியோக ஊழியர்கள் McDonald's உணவகங்களில் கூடினர்.

தடுமாறிப் போயினர் அதிகாரிகள். கிருமிப்பரவல் சூழலில் இது ஆபத்து என்று உணர்ந்த அவர்கள், வேறு வழியின்றி உணவகத்தை மூட வேண்டியதாயிற்று.

தலைநகர் ஜக்கார்த்தாவிலும் மற்ற நகரங்களிலும் உள்ள குறைந்தது 13 McDonald's உணவகங்கள் மூடப்பட்டதாகக் கூறப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்