Images
  • McDonalds Panadol
    (படம்: Amirulizarin/ Twitter)

Panadol கேட்ட வாடிக்கையாளருக்கு உதவிய உணவு விநியோகிப்பாளர்


மலேசியாவில் McDonald's உணவகத்திலிருந்து இணையம் வழி உணவுக்கு ஆர்டர் செய்த போது Panadol மாத்திரையும் கேட்டிருந்தார் வாடிக்கையாளர் ஒருவர்.

உணவு விநியோகிப்பாளர் உணவை வழங்க வந்த போது Panadol மாத்திரையையும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தார்!

வழக்கத்துக்கு மாறான தனது கோரிக்கையை உணவு விநியோகிப்பாளர் நிறைவு செய்ததால் மகிழ்ச்சியடைந்த வான் அமிருல் இஸாரின் (Wan Amirul Izarin) அதனைப் பற்றி தம்முடைய Twitter பக்கத்தில் குறிப்பிட்டார்.

உணவு விநியோகிப்பாளருக்கு நன்றி தெரிவிக்க அமிருல் செய்த பதிவு Twitterஇல் 30,000க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளது.

உணவு விநியோகிப்பாளரின் அன்பைப் பலர் பாராட்டியுள்ளனர்.

மற்றும் சிலர் அமிருல் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறினர்.
 

Top