Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: நெருக்கடிநிலை, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (MCO) - விதிமுறைகள்?

மாமன்னர் அறிவித்திருக்கும் நெருக்கடிநிலை (ஆகஸ்ட் 1 வரை)

வாசிப்புநேரம் -
மலேசியா: நெருக்கடிநிலை, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (MCO) - விதிமுறைகள்?

(படம்: Reuters/Lim Huey Teng)

மாமன்னர் அறிவித்திருக்கும் நெருக்கடிநிலை (ஆகஸ்ட் 1 வரை)

  • நாடாளுமன்றக் கூட்டமோ, தேர்தலோ நடத்தப்படமாட்டாது.
  • ஊரடங்கு விதிக்கப்படமாட்டாது.
  • கொரோனா கிருமித்தொற்றுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கில் தனியார் மருத்துமனைகள் அவற்றின் வளங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள, மன்னர் உத்தரவு பிறப்பிக்கமுடியும்.
  • நாடாளுமன்ற ஒப்புதலின்றி அரசாங்கம், சட்ட திட்டங்களை வெளியிடலாம்.
  • நெருக்கடி நிலை, ராணுவ அடக்குமுறை அல்ல. மக்களாட்சியில் அரசாங்கம் தொடர்ந்து செயல்படும்.
  • பொதுச்சேவைகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்

MCO எனும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு

மலேசியாவில், சிலாங்கூர், பினாங்கு, மலாக்கா, ஜொகூர், சபா, கோலாலம்பூர், புத்ரஜெயா, லபூவான் ஆகிய பகுதிகளில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

எப்போது: ஜனவரி 12 - ஜனவரி 26

பொது விதிகள்

  • மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்யக்கூடாது
  • திருமணம், சந்திப்பு, குழு விளையாட்டுகள் போன்ற சமூக ஒன்றுகூடல்கள் அனுமதிக்கப்படமாட்டா.
  • வாகனங்களில் 10 கிலோமீட்டர் சுற்றுவட்டாரங்களில் மட்டுமே பயணம் செய்யலாம்
  • அருகிலுள்ள கடைகளிலிருந்து மளிகைப் பொருள்களை வாங்குவதற்கு, ஒரு வீட்டிற்கு இருவருக்கு மட்டுமே அனுமதி உண்டு
  • ஒரு வாகனத்தில் அதிகபட்சம் இருவர் மட்டுமே பயணம் செய்யலாம்

விதிகளை மீறுவோருக்கு அதிகபட்ச அபராதமாக 1,000 ரிங்கிட் விதிக்கப்படும்.

வேலை இடங்கள்

  • 5 அத்தியாவசியத் துறைகளில் மட்டுமே வேலை தொடரும். அவை: உற்பத்தி, கட்டுமானம், சேவை, வர்த்தகம், வேளாண்மை மற்றும் பொருள்கள் விற்பனை.
  • முதலாளிகள், வேலையிடத்தில் எத்தனை பேர் இருக்கலாம் என முடிவு செய்யவேண்டும். 

உணவகங்கள், பொது இடங்கள்

  • உணவகங்கள் செயல்படலாம், ஆனால் உணவைப் பொட்டலம் செய்யும் சேவை மட்டுமே வழங்கப்படவேண்டும்.
  • பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும். பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும்.
  • அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே செல்லலாம். 

வழிபாட்டு இடங்கள்

  • வழிபாட்டுத் தலங்களில் அதிகபட்சம் 5 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மட்டுமே இருக்கலாம். பக்தர்களுக்கு அனுமதியில்லை.

பொழுதுபோக்கு நடவடிக்கைகள்

  • ஒரே வீட்டில் இருப்போர் மட்டுமே சேர்ந்து வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடலாம்
  • எந்நேரமும் 2 மீட்டர் பாதுகாப்பான இடைவெளி இருக்கவேண்டும்
  • ஒரே நேரத்தில் 2க்கும் அதிகமானோர் மெதுவோட்டம் செய்யக்கூடாது
  • குழுக்களில் சைக்கிள் ஓட்டக்கூடாது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்