Images
  • Ph measles
    படம்: REUTERS 

பிலிப்பீன்ஸ்: கடந்த மாதம் 860 தட்டம்மைச் சம்பவங்கள்

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் தட்டம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் குறைந்தது 860 தட்டம்மைச் சம்பவங்கள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் 55 பேர் மாண்டனர்.

தொற்று நோய்க்கான சான் லசாரோ (San Lazaro) மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

தட்டம்மைக்கான தடுப்பூசி குறைவானோருக்குப் போடப்பட்டதே, தொற்று ஏற்பட்டதற்குக் காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

டெங்கிக் காய்ச்சலுக்கான Deng-vaxia தடுப்பூசி தொடர்பான சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் பீதியடைந்ததும் அதற்கு காரணம்.

Top