Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கையில் தட்டம்மை முற்றிலும் ஒழிப்பு - உலகச் சுகாதார அமைப்பு

இலங்கையில் தட்டம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டிருப்பதாக உலகச் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
இலங்கையில் தட்டம்மை முற்றிலும் ஒழிப்பு - உலகச் சுகாதார அமைப்பு

(படம்: Lindsey Wasson/File Photo)


இலங்கையில் தட்டம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டிருப்பதாக உலகச் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கடைசியாக 2016 மே மாதத்தில், அந்தக் கிருமி உள்ளூரிலேயே தொற்றியது.

கடந்த 3 ஆண்டுகளாக இலங்கையில் பதிவான தட்டம்மைச் சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து தொற்றியவை.

அவை உடனடியாக அடையாளம் காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

உலக அளவில் தட்டம்மைச் சம்பவங்கள் அதிகரித்துவரும் வேளையில், இலங்கை புரிந்திருக்கும் சாதனை குறிப்பிடத்தக்கது என்று உலகச் சுகாதார அமைப்பு பாராட்டியது.

தட்டம்மைத் தொற்றில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க நாடு கொண்டுள்ள கடப்பாட்டையும் சுகாதாரப் பராமரிப்புத் துறை, பெற்றோர் கொண்டுள்ள மனஉறுதியையும் இலங்கையின் வெற்றி குறிப்பதாக உலகச் சுகாதார அமைப்பு சொன்னது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்