Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசிய நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்தன

மலேசியாவைச் சேர்ந்த சுமார் 20,000 நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

மலேசியாவைச் சேர்ந்த சுமார் 20,000 நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களை ஊடுருவிகள் இணையத்தில் வெளியிட்டுள்ளதாக Greenbone Networks இணையப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்தது.

ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில் உட்படக் குறைந்தது 52 நாடுகளில் மருத்துவத் தகவல்கள் ஊடுருவப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

நோயாளிகளின் பெயர்கள், பிறந்த நாள், மருத்துவக் குறிப்புகள், ஊடுகதிர்ச் சோதனைப் படங்கள் உட்பட பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின் மருத்துவத் தகவல் ஊடுருவப்படவில்லை என்றும் Greenbone Networks தெரிவித்தது.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்