Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலாக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள்

மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் உள்ள கம்போங் லடாங் பகுதியில் துண்டிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
மலாக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள்

(படம்: Pixabay)

மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் உள்ள கம்போங் லடாங் பகுதியில் துண்டிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று புல் வெட்டுபவர் ஒருவர், புல்வெளியில் 8 துண்டிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டார்.

உடனடியாக அவர் அதுகுறித்துக் காவல்துறையினரிடம் புகார் செய்தார்.

குறைந்தது 5 நாள்களுக்கு முன் அந்த உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டிருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது.

அவை ஒருவருக்குச் சொந்தமானவையா அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் உடல்பாகங்களா என்பது தெரியவில்லை.

தடயவியல் துறை அதுபற்றி ஆராய்ந்து வருகிறது.

காவல்துறை அதைக் கொலை என வகைப்படுத்தியுள்ளது.

அன்புக்குரிய எவரேனும் காணாமற்போயிருந்தால் அதுபற்றி உடனடியாகத் தகவல் தருமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

விசாரணை தொடர்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்