Images
  • kl
    (படம்:AFP)

கோலாலம்பூரில் வாரஇறுதியில் பேரணி; பயணம் மேற்கொள்வதை சிங்கப்பூரர்கள் தள்ளிவைப்பது நல்லது

சிங்கப்பூரர்கள் தற்போதைக்குக் கோலாலம்பூருக்குச் செல்வதைத் தள்ளிவைக்கும்படி வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கியக் காரணங்களுக்காகக் கோலாலம்பூருக்குச் செல்ல வேண்டுமென்றால் வெளியுறவு அமைச்சின் இணையப்பக்கத்தில் (https://eregister.mfa.gov.sg/) பதிந்து கொள்ளும்படியும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

நாளை கோலாலம்பூரின் மெர்டேக்கா சதுக்கத்தில் பெரிய அளவிலான கூட்டம் இடம்பெறவிருப்பதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

அதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பெட்டாலிங் ஜெயாவில் இன்னொரு பெரிய கூட்டம் இடம்பெறலாம் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. 

போக்குவரத்து தடைப்படலாம்; இடையூறுகளோ சர்ச்சைகளோ எழக்கூடும். 

அதனால் பயணிகள் கவனமாக இருப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

தற்போது கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூரர்கள் செய்திகளை அணுக்கமாகப் பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. 

தேவை ஏற்பட்டால் அதிகாரிகளின் உத்தரவுகளைக் கேட்டு நடக்கும்படியும் அமைச்சு கூறியது. 

கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் விவரங்கள்:
209 Jalan Tun Razak
50400 Kuala Lumpur
தொலைபேசி: +60 321 616 277 ; +60 1665 610 400
மின்னஞ்சல் முகவரி: singhc_kul@mfa.sg

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அலுவலகத்தின் 24 மணி நேரத் தொடர்பு விவரங்கள்:

தொலைபேசி: +65 6379 8800 / 8855
மின்னஞ்சல் முகவரி: mfa_duty_officer@mfa.gov.sg


 

Top