Images
  • India

பெங்களூரில் உடைமைகளைத் தொலைத்த சிங்கப்பூரர்கள்

இந்தியாவில் உள்ள பெங்களூர் நகருக்குச் சென்ற இரு சிங்கப்பூரர்களிடமிருந்து கடவுச்சீட்டு, iPad, பணப்பை ஆகியவை திருடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் பெங்களூரின் பிரபலமான MG ரோட்டில் கடந்த புதன்கிழமை நடந்ததாகத் தெரிகிறது.

இரு சிங்கப்பூரர்களும் வர்த்தகம் தொடர்பாக பெங்களூர் சென்றிருந்தனர்.

மடிக்கணினி, கடவுச்சீட்டு, iPad, பணப்பை போன்றவை காணாமல் போனதைத் தொடர்ந்து அவ்விருவரும் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்துவருவதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.

Top