Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

MH17 விமானம் குறித்து நெதர்லந்தில் நடக்கவுள்ள வழக்கைத் தடைசெய்ய மலேசிய அமைப்புகள் வேண்டுகோள்

டச்சு அரசாங்கத்திடம் இது குறித்து பேசவேண்டும் என்று மலேசியப் பிரதமர் மஹாதீர் முகம்மதின் உதவியை அவை நாடியுள்ளன.

வாசிப்புநேரம் -
MH17 விமானம் குறித்து நெதர்லந்தில் நடக்கவுள்ள வழக்கைத் தடைசெய்ய மலேசிய அமைப்புகள் வேண்டுகோள்

(படம்: AFP)

மலேசிய ஏர்லைன்ஸ் MH17 விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவத்தின் தொடர்பில் நெதர்லந்து நடத்தவுள்ள வழக்கைத் தடைசெய்யும்படி மலேசிய அரசாங்கச் சார்பற்ற அமைப்புகள் சில கேட்டுக்கொண்டுள்ளன.

டச்சு அரசாங்கத்திடம் இது குறித்து பேசவேண்டும் என்று மலேசியப் பிரதமர் மஹாதீர் முகம்மதின் உதவியை அவை நாடியுள்ளன.

2014ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தின் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் பல முக்கிய கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கவில்லை என்றும் மூன்று அமைப்புகள் கூறியுள்ளன.

ஏவுகணை ஒன்று அந்த விமானத்தை வீழ்த்தியது என்று கூறப்படுவது பொய் என்று அவை குறைகூறின.

சம்பவத்தின் தொடர்பில் மக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ரஷ்யாவுக்கு ஆதரவளிக்கும் பிரிவினைவாதிகள் அந்த விமானத்தை ஏவுகணை கொண்டு வீழ்த்தியதாகக் கூட்டு விசாரணைக் குழு கூறியிருந்தது.

ரஷ்யாவைச் சேர்ந்த மூவர்மீதும், உக்ரேனைச் சேர்ந்த ஒருவர்மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வழக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நெதர்லந்தில் நடைபெறும் என்ற தகவல் வெளியானது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்