Images
  • Mice

இரு பெண் எலிகளுக்குப் பிறந்த குட்டிகள்

ஆண் எலியில்லாமல் இரண்டு பெண் எலிகளை மட்டும் கொண்டு எலிக் குட்டிகளை உருவாக்கியுள்ளனர் சீன ஆய்வாளர்கள்.

மரபணு மாற்றத்தின் மூலம் அது சாத்தியமானது.

ஆரோக்கியமான அன்னை எலிகள் இரண்டும் சேர்ந்து குட்டி எலிகளை உருவாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதேபோல் இரண்டு ஆண் எலிகளைக் கொண்டு எலிக் குட்டிகளை உருவாக்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

அப்படிப் பிறந்த எலிக்குட்டிகள், பிறந்த சில நாட்களிலேயே மாண்டு போனதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆய்வு எதற்காக மேற்கொள்ளப்பட்டது?

மனிதர்கள் உள்ளிட்ட பாலூட்டிகளால் பாலியல் இனப்பெருக்கம் மூலமாக மட்டுமே குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்.

அதற்கு ஆணும் பெண்ணும் இணைய வேண்டும்.

ஆனால் அதற்கு விதிவிலக்கான உயிரினங்களும் உலகில் இருக்கவே செய்கின்றன.

சில வகை மீன்கள், பறவைகளால் தனித்து இனப்பெருக்கம் செய்யமுடியும்.

இது 'parthenogenesis' என்று அழைக்கப்படுகிறது.

இதனைப் பற்றிப் புரிந்துகொள்ள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மனிதர்களிடையே ஓரின இனப்பெருக்கம் மேற்கொள்ளும் சாத்தியம் உண்டா?

இப்போதைக்கு இல்லை.

மனித இனத்தைப் பொறுத்தவரை, பெண்ணிடமிருந்து உற்பத்தியாகும் கருமுட்டைகளும் ஆணிடத்தில் உற்பத்தியாகும் விந்தணுக்களும் மரபணு ரீதியாக வெவ்வேறு இயல்பு கொண்டவை.

இரண்டில் ஒன்று இல்லையென்றாலும் மனிதக் குழந்தை உருவாவது பாதிக்கப்படுகிறது.

அதோடு ஓரின இனப்பெருக்கம் நெறியற்ற செயல் என்ற கருத்தாக்கமே பரவலாக உள்ளது.

அவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு மனத்தளவிலும் உடலளவிலும் எந்தவித நிரந்தர பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதியாகும்வரை, இத்தகைய ஆய்வுகள் மனிதர்களிடத்தில் மேற்கொள்ளப்பட மாட்டா.  

Top