Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரியாவின் புதுவிதமான ஏவுகணைச் சோதனை

வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பாயும் புதுவிதமான ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
வடகொரியாவின் புதுவிதமான ஏவுகணைச் சோதனை

(படம்: KCNA via REUTERS)


வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பாயும் புதுவிதமான ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

வொன்சான் பே (Wonsan Bay) பகுதியில் இருந்து ஏவுகணை, விண்ணை நோக்கிப் பாய்ச்சப்பட்டதாக வடகொரியச் செய்தி நிறுவனமான KCNA கூறியது.

Pukguksong-மூன்று என அந்த ஏவுகணை அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

ஏவுகணைச் சோதனையை மேற்கொண்ட ஆய்வுப் பிரிவுகளுக்கு, அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டதாகத் தகவல் அளிக்கப்பட்டது.

ஏவுகணைச் சோதனையால் வடகொரியாவின் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என KCNA செய்தியறிக்கை குறிப்பிட்டது.

வடகொரியாவின் அண்மை ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

அணுவாயுதக் களைவு பற்றி இரு நாடுகளுக்குமிடையில் பேச்சுகள் மீண்டும் தொடங்கவிருந்த வேளையில் வடகொரியாவின் அண்மை ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்