Images
  • Azmin ali
    படம்: Bernama

ஓரினப் பாலுறவுக் காணொளியில் இருப்பது தாம் அல்ல : மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர்

ஓரினப் பாலுறவுக் காணொளியில் இருப்பது தாம் அல்லவென்று மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் முகமது அஸ்மின் அலி தெரிவித்திருக்கிறார்.

அந்தக் காணொளி சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமது அரசியல் வளர்ச்சியை அழிக்கத் திட்டமிடப்பட்ட செயல் அதுவென்று திரு. முகமது அஸ்மின் தெரிவித்தார்.

நேற்று இணையத்தில் பரவிய மூன்று காணொளிகள் 2 ஆண்கள் ஓரினப் பாலுறவில் ஈடுபட்டிருப்பதைக் காட்டின.

அதில் இருப்பது தான்தான் என்பதை ஒப்புக்கொண்ட ஹாஸிக் அஸிஸ் (Haziq Aziz) எனும் ஆடவர் தன்னுடன் இருப்பவர் மலேசிய அமைச்சர் முகமது அஸ்மின் என்று கூறியிருக்கிறார்.

காணொளியின் நம்பகத்தன்மை குறித்து விசாரிக்குமாறு PKR கட்சி கேட்டுக்கொண்டிருப்பதாக The Star நாளேடு குறிப்பிட்டது.  

Top