Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கும் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

வாசிப்புநேரம் -
பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கும் இந்தியப் பிரதமர் மோடி

(படம்: REUTERS/Adnan Abidi)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் ஒரேயொரு ஊழல் குற்றச்சாட்டுகூட தங்கள் கட்சியினர்மீது சுமத்தப்படவில்லை என்று அவர் எடுத்துரைத்தார். அனைவரையும் சமமாக நடத்துதிலும், நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்வதிலும் தமது கட்சி நம்பிக்கைகொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சிக் கூட்டத்தில் திரு. மோடி உரையாற்றினார்.

இரண்டாவது தவணைக் காலத்தை எதிர்நோக்கும் திரு. மோடியின் அரசியல் கனவுகளுக்கு எதிர்க்கட்சிக் கூட்டணி அச்சுறுத்தலாக விளங்குகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் மாநில எதிர்க்கட்சிகள் கூட்டாகக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளன.

ஆளும் பாரதிய ஜனதா கட்சியைப் போன்றே முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் அது பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

அபுதாபியில் உரையாற்றியபோது பொதுத்தேர்தல் குறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவில் பொருளியல் சீர்திருத்தத்தைக் கொண்டுவர உறுதியளித்தார்.

பிரதமர் மோடி அறிமுகம் செய்த பொருள், சேவை வரியை ரத்துசெய்வதும் அதில் அடங்கும்.

இந்தியாவில் இந்த ஆண்டு மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவேண்டும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்