Images
  • modi litter (1)
    (படம்: Narendra Modi/ Twitter)

கடற்கரையில் குப்பை பொறுக்கிய இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் சி சின்பிங்கும் இடையே அதிகாரபூர்வமற்ற சந்திப்பு சென்னைக்கு அருகேயுள்ள மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.

அந்தச் சந்திப்புக்காக, கடற்கரையோரம் அமைந்துள்ள உல்லாச தலத்தில் தங்கியுள்ள திரு. மோடி, சமூக சேவைக்கும் நேரம் ஒதுக்கியுள்ளார்.


இன்று காலை, உடற்பயிற்சிக்காக கடற்கரையில் ஓடிய திரு. மோடி அங்கு கிடந்த குப்பைகளைப் பொறுக்கினார்.

அது பற்றிய காணொளியைத் திரு. மோடி தமது Twitter பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
 

Top