Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: கிருமிப்பரவல் சூழலை 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பரிசீலிக்கும் பிரதமர் மோடி

இந்தியா: கிருமிப்பரவல் சூழலை 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பரிசீலிக்கும் பிரதமர் மோடி

வாசிப்புநேரம் -

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கிருமிப்பரவல் சூழலை 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்றால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிரா, தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றின் முதலமைச்சர்கள் அவர்களில் அடங்குவர்.

கிருமித்தொற்று நிலவரம் குறித்து பிரதமர் மோடி, கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன் முதலமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார்.

இந்தியாவில் கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 வாரங்களில் முதல்முறையாக 55,000க்கும் குறைவாகப் பதிவானது.

தற்போது, அங்கு 2.2 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

COVID-19 நோய்ப்பரவலைச் சமாளிக்கக் கூடுதலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று இன்று நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் வரும் வாரங்களில் அன்றாடம் சுமார் 1 மில்லியன் பரிசோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் பிரபலமான திருப்பதி ஆலயத்தில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து 743 ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அர்ச்சகர் ஒருவர் உட்பட 3 பேர் அந்நோயால் மாண்டனர்.

கடந்த மாதம் சுமார் 200 ஆயிரம் பக்தர்கள் வருகையளித்த அந்த ஆலயத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்