Images
  • modi (3)
    (படம்: AFP / Manjunath Kiran)

வீர தீரத் தொலைக்காட்சித் தொடரில் தோன்றிய இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகத் தோன்றிய தொலைக்காட்சித் தொடர், டிஸ்கவரி ஒளிவழியில் ஒளிபரப்பாகியிருக்கிறது. Running Wild என்னும் தொடரில் அவர் ஈட்டி ஒன்றைச் செய்யும் முன்னோட்டக் காணொளி, முன்னதாக இணையத்தில் வேகமாகப் பரவியது.


தொடரின் ஓர் அங்கம் இந்தியாவின் ஜிம் கோர்பெட் (Jim Corbett) தேசியப் பூங்காவில் படமெடுக்கப்பட்டது. சுற்றுச்சுழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், அந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் இந்தியப் பிரதமர்.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைப் பார்த்த இந்தியர்கள் சிலர் அவரைப் பாராட்டியுள்ளனர். வேறு சிலரோ அவரைக் கண்டித்துள்ளனர்.

வாக்காளர்கள், குறிப்பாக இளையர்களை ஈர்க்க பிரதமர் மோடி சமூக ஊடகங்களையும் பிரபலங்களையும் பயன்படுத்துவதுண்டு.

பாலிவுட் பிரபலங்கள், தங்களுக்கு உள்ள பிரபலத்தைக் கொண்டு ரசிகர்களை அதிக எண்ணிக்கையில் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க ஊக்குவிக்கவேண்டுமென, கடந்த மார்ச் மாதம் Twitter வழியாகத் திரு. மோடி கேட்டுக்கொண்டிருந்தார்.

பின்னர் நடிகர் அக்ஷய் குமாருடன் நேர்காணலில் அவர் இடம்பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல், இயற்கை மீது உள்ள பிரியத்தை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்ட திரு. மோடியைப் பார்வையாளர்கள் சிலர் பாராட்டினர். 

Top