Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான தேசத்தைக் கட்டியெழுப்ப விருப்பம் : இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான தேசத்தைக் கட்டியெழுப்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான தேசத்தைக் கட்டியெழுப்ப விருப்பம் : இந்தியப் பிரதமர் மோடி

படம்: REUTERS

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான தேசத்தைக் கட்டியெழுப்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பதைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய மக்களவைக்கான இறுதிக்கட்ட முடிவுகள் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

என்றாலும், இதுவரை வந்த முடிவுகளின் அடிப்படையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய மக்களவைக்கான மொத்த இடங்கள் 542.

அவற்றுள் 303 இடங்களைப் பாரதீய ஜனதா கட்சிக் கூட்டணி கைப்பற்றியுள்ளதாக முன்னோடித் தகவல்கள் கூறுகின்றன.

சென்ற தேர்தலில் அந்தக் கட்சி 282 இடங்களில் வென்றது.

கடந்த முப்பது ஆண்டுகளில் வேறெந்த அரசியல் கட்சியும் காணாத வெற்றியை பாரதீய ஜனதா பெற்றிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மறுபுறம், எதிர்த்தரப்பு காங்கிரஸ் கட்சி பலத்த சரிவைச் சந்தித்துள்ளது.

அந்தக் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தாம் போட்டியிட்ட அமேதி தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.

இந்திய மக்கள் திரு. நரேந்திர மோடியைப் பிரதமராகத் தெரிவு செய்திருக்கிறார்கள். அவர்களுடைய முடிவைத் தாம் மதிப்பதாகத் திரு. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் தமக்கு மிகப் பெரிய பொறுப்பை வழங்கியிருப்பதாகத் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.
தம்மால் ஆன அனைத்தையும் நாட்டு மக்களுக்காகச் செய்யவிருப்பதாகவும் அவர் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்