Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியச் - சீனத் தலைவர்களின் உச்சநிலைச் சந்திப்பு புதிய அத்தியாயத்திற்கு வழிவகுக்கும் : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளிப்படையாக, மனம் திறந்து கலந்துரையாடியதாய்ச் சீன அதிபர் சி சின்பிங் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
இந்தியச் - சீனத் தலைவர்களின் உச்சநிலைச் சந்திப்பு புதிய அத்தியாயத்திற்கு வழிவகுக்கும் : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

(படம்: Reuters)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளிப்படையாக, மனம் திறந்து கலந்துரையாடியதாய்ச் சீன அதிபர் சி சின்பிங் கூறியுள்ளார்.

இருநாட்டு உறவை மேம்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளைப் பரிசீலிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியச் - சீன உச்சநிலைச் சந்திப்பு புதிய அத்தியாயத்திற்கு வழிவகுக்கும் என்று திரு. மோடி கூறியுள்ளார்.

சென்னையின் தென் பகுதியில் உள்ள மாமல்லபுரத்தில் அதிகாரபூர்வ சந்திப்புக்கு முன்னர், திரு. சியும் திரு. மோடியும் வங்கக் கடற்கரையில் நடந்தவாறு உரையாடினர்.

எல்லை தொடர்பான சர்ச்சை, காஷ்மீர் விவகாரம், வர்த்தகத்தில் சீன ஆதிக்கம் ஆகியவற்றின் தொடர்பில் பதற்றம் நீடிக்கும் சூழலில், தலைவர்கள் இருவரும் கடந்த ஓராண்டில் இரண்டாவது முறையாகச் சந்தித்துள்ளனர்.

இருநாட்டுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை விவேகமாகக் கையாள்வது குறித்து சென்ற ஆண்டு ஏற்பட்ட இணக்கத்தைத் திரு. மோடி நினைவுகூர்ந்தார்.

இதற்கிடையே, இன்று காலை, தம் நடைப்பயிற்சியின்போது மாமல்லபுரம் கடற்கரையில் கிடந்த குப்பைகளைத் திரு. மோடி அப்புறப்படுத்தினார்.

சுமார் அரை மணி நேரம், கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், தண்ணீர் போத்தல்கள் போன்றவற்றைத் திரு. மோடி பையில் பொறுக்கிப் போட்டார்.

அது பற்றிய காணொளியை Twitter இல் வெளியிட்ட திரு. மோடி, பொது இடங்களைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை 2022க்குள் ஒழிக்கப்போவதாக முன்னர் அவர் சூளுரைத்திருந்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்