Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

2019 தேர்தலில் கூடுதல் பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவோம் - இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் தமது பாரதிய ஜனதாக் கட்சி இன்னும் அதிகப் பெரும்பான்மை வாக்குகளோடு வெற்றிபெறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
2019 தேர்தலில் கூடுதல் பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவோம் - இந்தியப் பிரதமர் மோடி

(படம்:REUTERS/Danish Ismail)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் தமது பாரதிய ஜனதாக் கட்சி இன்னும் அதிகப் பெரும்பான்மை வாக்குகளோடு வெற்றிபெறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இளையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள், துரிதப் பொருளியல் வளர்ச்சி போன்ற வாக்குறுதிகளை அவரின் அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை என்ற எதிர்த்தரப்பின் குற்றச்சாட்டுகளைத் திரு.மோடி நிராகரித்தார்.

பாரதிய ஜனதா வழிநடத்தும் அரசாங்கம் சமய வேறுபாடின்றி அனைத்துக் குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குக் கடப்பாடு கொண்டுள்ளது என்று அவர் வலிறுத்தினார்.

Times of India நாளிதழின் கேள்விகளுக்கு மின்னஞ்சல்வழி திரு.மோடி பதிலளித்தார்.

இதுவரை இல்லாத அளவுக்குத் தமது கட்சி நாடாளுமன்றத்தில் இடங்களை வெல்லும் என்று தாம் நம்பிக்கையோடு இருப்பதாகக் கூறினார் திரு.மோடி.

"மக்கள் எங்கள் பக்கம். அஞ்சுவதற்கு என்ன இருக்கிறது" என்றார் அவர்.

மேலும் ஐந்தாண்டுத் தவணைக்கு ஆட்சி நடத்தும் வாய்ப்பு திரு.மோடிக்கு அதிகம் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்