Images
  • Tortured Child
    (படம்: Pixabay) 

இந்தியா: 4 வயதுச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்காக ஆடையில்லாமல் இழுத்துச் செல்லப்பட்ட ஆடவர்


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 வயதுச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆடவரைச் சாலையில் ஆடையில்லாமல் நடக்கச் செய்தனர் பொதுமக்கள்.

ஜவஹர் வைத்யா (Jawahar Vaidya) எனும் அந்த 35 வயது ஆடவரை அடித்து, கைகளைக் கட்டி நடக்கச் செய்து பின் காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்ததாக NDTV தெரிவித்துள்ளது.

வங்கியில் பணிபுரியும் ஜவஹர் பணம் வசூலிப்பதற்காகச் சிறுமியின் வீட்டிற்குச் செல்வது வழக்கம்.

அத்தகைய ஒரு வேளையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்ததைக் கண்டு அவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றிருக்கிறார் ஜவஹர்.

அப்போது சிறுமியின் தாயார் வீட்டிற்குத் திரும்ப, அவருடைய கூக்குரலைக் கேட்டு அண்டைவீட்டார் அங்கு கூடிவிட்டனர்.

பின் ஆடவரைத் தாக்கிக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் அவர்கள்.

இந்தியக் குற்றவியல் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து சிறாரைப் பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஜவஹர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

 

Top