Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மங்கோலியாவில் இன்று வாக்களிப்பு

கம்யூனிச ஆட்சியின் கீழ் 60 ஆண்டு காலமாக இருந்த மங்கோலியா, 1992ஆம் ஆண்டு தனக்கென புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.

வாசிப்புநேரம் -
மங்கோலியாவில் இன்று வாக்களிப்பு

(படம்: AFP)

கம்யூனிச ஆட்சியின் கீழ் 60 ஆண்டு காலமாக இருந்த மங்கோலியா, 1992ஆம் ஆண்டு தனக்கென புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.

எட்டாவது முறையாக நடைபெறும் பொதுத் தேர்தலில் வாக்காளர்கள், இன்று மங்கோலிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்களிப்புத் தொடங்கியது.

கொரோனா நோய்ப் பரவல், மந்தமடைந்துள்ள பொருளியல் போன்ற பல்வேறு சவால்களுக்கு இடையே பொதுத் தேர்தல் இடம்பெறுகிறது.

நகர்ப்புறங்களில் அதிகப் போட்டி நிலவுகிறது.

தலைநகர் உலான்பட்டாரில் (Ulaanbaatar) உள்ள குறிப்பிட்ட வட்டாரத்தில் 3 நாடாளுமன்ற இடங்களுக்கு 30 பேர் போட்டியிடுகின்றனர்.

ஆசிய நாடுகளில்
தென் கொரியாவுக்கு அடுத்து, மங்கோலியாவில்தான் பொதுத் தேர்தல் நடக்கிறது.

மங்கோலிய மக்கள் கட்சியே வெற்றிபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மங்கோலியாவில் 215 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருமித்தொற்றால் அங்கு எந்த மரணமும் நேரவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்