Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நச்சுணவு அறிகுறி - மங்கோலியாவில் KFC உணவகங்களுக்குத் தற்காலிகத் தடை

நச்சுணவு காரணமாக மங்கோலியாவில் உள்ள KFC உணவகங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -
நச்சுணவு அறிகுறி - மங்கோலியாவில் KFC உணவகங்களுக்குத் தற்காலிகத் தடை

(படம்: AFP/Ben Stansall)

நச்சுணவு காரணமாக மங்கோலியாவில் உள்ள KFC உணவகங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

KFC உணவகத்தின் ஒரு கிளையில் சாப்பிட்ட 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், நூற்றுக்கணக்கானோரிடம் நச்சுணவைச் சாப்பிட்ட அறிகுறி காணப்பட்டது. அதைத் தொடர்ந்து மங்கோலியாவில் உள்ள KFC உணவகங்கள் எல்லாவற்றையும் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட உணவகத்திற்கான தண்ணீர் விநியோகத்தில் கிருமித் தொற்று இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சுமார் 247 பேர் வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவற்றால் அவதியுற்றனர்.

மங்கோலிய அரசாங்கம் நடத்தும் விசாரணைக்கு, KFC உணவகம் ஒத்துழைத்து வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்