Images
மங்கோலிய-ரஷ்ய எல்லைப் பகுதியை உலுக்கிய வலுவான நிலநடுக்கம்
மங்கோலியாவின் வடக்குப் பகுதியில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவான நிலநடுக்கம், மலைப்பாங்கான மங்கோலிய-ரஷ்ய எல்லைப் பகுதியை உலுக்கியது.
மங்கோலிய நேரப்படி இன்று அதிகாலை ஐந்தரை மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்துக்குப் பிந்திய பல அதிர்வுகள் அந்தப் பகுதியில் உணரப்பட்டன.
நிலநடுக்கத்தால் உயிருடற்சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
அங்குள்ள மக்கள், நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் தன்மை கொண்ட வீடுகளில் வசிப்பதால், உயிருடற்சேதம் ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவே என்று அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.