Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் கொலையுண்ட மங்கோலிய அழகியின் தந்தை மலேசியப் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்

2006ஆம் ஆண்டு ஷா அலாமில் அல்ட்டண்டுன்யா சுடப்பட்டு  மாண்டார்.

வாசிப்புநேரம் -
மலேசியாவில் கொலையுண்ட மங்கோலிய அழகியின் தந்தை மலேசியப் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்

(படம்: Twitter/Amy Chew)

மலேசியாவில் 2006ஆம் ஆண்டு கொலையுண்ட மங்கோலிய அழகி அல்ட்டண்டுன்யா ஷரீபூவின் (Altantuya Shaariibuu) தந்தை  நாளை பிரதமர் மகாதீர் முகமதைச் சந்திக்கவுள்ளார்.

கொலை வழக்குத் தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்குவதன் தொடர்பில் இருவரும் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்காக அரசபூர்வ விசாரணைக் குழு அமைக்கும் சாத்தியம் குறித்தும் பேசப்படும். இந்த வழக்கில், பிரதமர் மகாதீர் நியாயமான தீர்வு கிடைக்க முயல்வதைத் தம்மால் புரிந்துகொள்வதாகத் தந்தை சீட்டேவ் ஷரிபு சொன்னார். 

பிரதமரைத் தாம் சந்திப்போம் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை என்றும் அவர் கூறினார்.

தமது குடும்பத்தின் வேதனையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவும் நீதியை நிலைநாட்டவும் புதிய அரசாங்கம் ஆன அனைத்தையும் செய்யும் என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

7 பேர் கொண்ட குடும்பத்துக்கு உறுதுணையாக இருந்தவர் குமாரி அல்ட்டண்டுன்யா. அவரது மரணம் பேரிழப்பு என்றார் தந்தை.

நாளை மாலை ஐந்து மணிக்கு டாக்டர் மகாதீருடனான சந்திப்பு புத்ராஜெயாவில் இடம்பெறும் என்று வழக்குரைஞர் ராம்கார்ப்பல் சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.

(படம்: Twitter/Amy Chew)

அவரின் உடல் வெடிகுண்டுகளைக் கொண்டு தகர்க்கப்பட்டது.

அந்தக் கொலைச் சம்பவத்தின் தொடர்பில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் முன்னாள் காவலர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டு 2015ஆம் ஆண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  

அவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்றதில் அங்குள்ள குடிநுழைவுத் தடுப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்