Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தியோமன் தீவில் உடும்பு கடித்த சிறுவனுக்கு 30 தையல்கள்

மலேசியாவின் தியோமன் தீவில் உடும்பு கடித்த மூன்று வயதுச் சிறுவனின் காயத்திற்கு 30 தையல்கள் தேவைப்பட்டன.

வாசிப்புநேரம் -
தியோமன் தீவில் உடும்பு கடித்த சிறுவனுக்கு 30 தையல்கள்

(படம்: Pixabay)

மலேசியாவின் தியோமன் தீவில் உடும்பு கடித்த மூன்று வயதுச் சிறுவனின் காயத்திற்கு 30 தையல்கள் தேவைப்பட்டன.

உடும்பு தாக்கியதில் ஃபலிக் இமான் முகமது ஃபதிருல் இஸ்வானுக்கு ஏற்பட்ட தொற்றைக் குணப்படுத்த அவருக்கு மருந்து கொடுக்கப்பட்டது.

மருத்துவர்கள் அடுத்த சில நாள்களுக்குச் சிறுவனின் உடல்நிலையை மருத்துவமனையில் கண்காணிக்கவிருப்பதாக அவருடைய தந்தை கூறியுள்ளார்.

தந்தை வேலைசெய்யும் விடுதியில் 1.5 மீட்டர் நீள உடும்பு ஃபலிக்கின் காலை கடித்திருக்கிறது.

தந்தை உடும்பை இருமுறை மிதித்ததும் அது சிறுவனின் காலை விட்டுவிட்டது.

விடுதியில் இத்தகைய சம்பவம் நடப்பது இது இரண்டாம் முறை.

2014இல் ஓர் எட்டு மாதக் குழந்தை அங்கு உடும்பால் தாக்கப்பட்டது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்