Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

திருடு போனதாக எண்ணிய கைத்தொலைபேசியில் குறும்புமிக்க குரங்கின் 'selfie' படங்கள்

திருடு போனதாக எண்ணிய கைத்தொலைபேசியில் ஒரு குரங்கின் 'selfie' படங்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளார், மலேசியாவில் ஓர் ஆடவர்!

வாசிப்புநேரம் -

திருடு போனதாக எண்ணிய கைத்தொலைபேசியில் ஒரு குரங்கின் 'selfie' படங்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளார், மலேசியாவில் ஓர் ஆடவர்!

குரங்கு எடுத்துக்கொண்ட படங்களை, அவர் சமூக ஊடகத்தில் பதிவேற்றினார். இப்போது அவை பரவலாகப் பகிரப்படுகின்றன.

குரங்கு கைத்தொலைபேசியைச் சாப்பிட முயற்சி செய்வதைக் காட்டும் காணொளியும் அவற்றுள் அடங்கும்!

Zackrydz என்ற Twitter பயனீட்டாளர், அந்த வேடிக்கையான சம்பவத்தை BBC செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஜொகூரின் பாத்து பாஹாட் (Batu Pahat) பகுதியைச் சேர்ந்த அந்த ஆடவர், சில நாள்களுக்கு முன்னர் தமது கைத்தொலைபேசியைத் தொலைத்தார்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அது திருடு போயிருக்கலாம் என்று அவர் எண்ணினார்.

இருப்பினும், வீட்டிற்குள் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான அறிகுறி இல்லை.

தொலைபேசி எங்கிருக்கிறது என்பதை அவரால் அடையாளம் காணவும் இயலவில்லை.

இரண்டு நாள்களுக்கு பிறகு, எதிர்பாராமல், வீட்டிற்கு பின்னால் உள்ள காட்டுப்பகுதிக்கு அருகில் ஆடவர் தம்முடைய கைத்தொலைபேசியைக் கண்டுபிடித்தார்.
அதைச் சோதித்ததில், தொலைபேசியை மனிதர்கள் யாரும் திருடவில்லை... ஒரு குரங்குதான் திருடியது என்று ஆடவர் அறிந்தார்!

அதற்கு ஆதாரமாகக், குரங்கு பல படங்களை விட்டுச்சென்றதை அவர் கவனித்தார்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலரின் கைத்தொலைபேசிகளையும், குறும்புமிக்க குரங்கு முன்னர் கவர்ந்துசென்றதாக அவர் பின்னர் அறிந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்