Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூரிலிருந்து செல்பவர்களிடம் குரங்கம்மைத் தொற்று அறிகுறிகள் கண்டறிய உடல் வெப்பச் சோதனைக் கருவிகள்

இந்தோனேசியாவின் விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும், சிங்கப்பூரிலிருந்து வருவோருக்கு குரங்கம்மைத் தொற்று அறிகுறிகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய உடல் வெப்பச் சோதனைக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவின் விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும், சிங்கப்பூரிலிருந்து வருவோருக்கு குரங்கம்மைத் தொற்று அறிகுறிகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய உடல் வெப்பச் சோதனைக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் சிங்கப்பூர் அதன் முதல் அரிய குரங்கம்மைச் சம்பவத்தை உறுதிசெய்தது.

அதனைத் தொடர்ந்து பெக்கான்பாரு, பாத்தாம் (Pekanbaru, Batam) உள்ளிட்ட இடங்களில் சோதனைக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவின் 13 அனைத்துலக விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுவதாக Jakarta Post கூறியது.

நோய் அறிகுறிகள் இருப்பதாக யாரும் அடையாளங் காணப்பட்டால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சிங்கப்பூரிலிருந்து நேரடியாக தினந்தோறும் 50-இலிருந்து 100 பேர் வரை பெக்கான்பாரு விமான நிலையத்தில் தரையிறங்குகின்றனர் என்று அதிகாரிகள் கூறினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்