Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

குரங்கம்மைத் தொற்று: பாத்தாமில் விழிப்புநிலை

நோய்த் தொற்று ஏற்பட்டால் அதற்கு சிகிச்சையளிக்க இரண்டு மருத்துவமனைகள் தயார்நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

வாசிப்புநேரம் -
குரங்கம்மைத் தொற்று: பாத்தாமில் விழிப்புநிலை

(படம்: CDC Public Health Image Library)

அந்தத் தகவலை The Jakarta Post நாளேடு வெளியிட்டது.

நோய்த் தொற்று ஏற்பட்டால் அதற்கு சிகிச்சையளிக்க இரண்டு மருத்துவமனைகள் தயார்நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

Batam Free Trade Zone மருத்துவமனையும், எம்பங் ஃபாதிமா பொது மருத்துவமனையும் (Embung Fatimah Public Hospital) சிகிச்சையளிக்கத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூரையும் பாத்தாமையும் இணைக்கும் 5 கப்பல் துறைமுகங்களிலும் சோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

பாத்தாம் விமான நிலையத்திலும் பயணிகள் கண்காணிக்கப்படுவர் என்று அதிகாரிகள் கூறினர்.

கடந்த மாதம் 28ஆம் தேதி, நைஜீரியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 38 வயது ஆடவருக்குக் குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

மத்திய, மேற்கு ஆப்பிரிக்காவில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் அரிய நோய் குரங்கம்மை.

காய்ச்சல், உடல் வலி, மூட்டுகளில் வீக்கம், அரிப்பு போன்றவை குரங்கம்மையின் அறிகுறிகள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்