Images
  • Moon Jae In
    (படம்: Reuters)

கொரியப் போர் முடிவுற்றதாக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்: தென் கொரிய அதிபர் நம்பிக்கை


கொரியப் போர் முடிவுற்றதாக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

BBC நேர்காணலில் அவர் அவ்வாறு கூறினார்.

இரு கொரியாக்களுக்கும் இடையிலான போர் 1953இல், போர் நிறுத்தத்துடன் முடிவடைந்தது.

ஆனால் போரை அதிகாரபூர்வமாக முடித்து வைக்கத் தேவையான அமைதி உடன்பாடு எதிலும் இதுவரை இரு கொரியாக்களும் கையெழுத்திடவில்லை.

வட கொரியாவை, அணுவாயுதங்களைக் கைவிடச் செய்யும் முயற்சி
அரசதந்திர ரீதியாகப் பல்வேறு சவால்களை உள்ளடக்கியதாகவே இருக்குமெனத் திரு. மூன் குறிப்பிட்டார்.

திரு. கிம்முக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையிலான சமரசப் பேச்சுவார்த்தை முட்டுப்பட்டால், அதற்குத் தீர்வுகாண்பதில்
ஐரோப்பியத் தலைவர்கள் தமக்கு உதவுவார்கள் என்று நம்புவதாகவும் திரு. மூன் BBC செய்தியாளரிடம் கூறினார்.

Top