Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: 'சந்திரயான்' விண்வெளி பயணம் ஒத்திவைப்பு

இந்தியா, சந்திர மண்டலத்துக்கு விண்கலத்தை அனுப்பும் அதன் இரண்டாம் முயற்சியை ஒத்திவைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியா: 'சந்திரயான்' விண்வெளி பயணம் ஒத்திவைப்பு

(படம்: MANJUNATH KIRAN/AFP)

இந்தியா, சந்திர மண்டலத்துக்கு விண்கலத்தை அனுப்பும் அதன் இரண்டாம் முயற்சியை ஒத்திவைத்துள்ளது.

தொழில்நுட்ப கோளாற்றால் 'சந்திரயான் 2' எனும் அந்த விண்கலப் பயணம் இன்று (ஜூலை 15) காலை ஒத்திவைக்கப்பட்டது.

விண்கலம் புறப்பட ஒரு மணி நேரத்துக்கும் குறைவான கால அவகாசம் இருந்த வேளையில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.

விண்கலப் பயணம் மீண்டும் எப்போது மேற்கொள்ளப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுவரை அமைப்பு மேற்கொண்டுள்ள விண்வெளிப் பயணங்களில் ஆகச் சிரமமானதாய் 'சந்திரயான் 2' கருதப்படுகிறது.

சிங்கப்பூர் நேரப்படி, விண்கலம் இன்று அதிகாலை 5.21மணிக்கு அதன் பயணத்தைத் தொடங்கியிருக்க வேண்டும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்