Images
  • Moon
    (படம்: REUTERS/Kim Hong-Ji)

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் ஐரோப்பிய பயணம் இன்று தொடக்கம்


தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், ஒரு வார அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு இன்று ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கிறார்.

கொரியத் தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிக்கு ஐரோப்பிய நாடுகளுடன் வத்திகனின் ஆதரவையும் பெற அவர் முனைந்துள்ளார்.

அணுவாயுதக் களைவு, அமைதி ஆகியவற்றைச் சாதிக்க அது உதவும் என்று அதிபர் மூன் நம்புவதாக, அதிபர் அலுவலக அதிகாரியை மேற்கோள்காட்டி Korea Times நாளேடு தகவல் வெளியிட்டது.

தென் கொரிய அதிபர், அடுத்த வாரம் போப் ஃப்ரான்ஸிஸைச் சந்திப்பார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், பியோங்யாங் வரும்படி விடுத்திருக்கும் அழைப்பைத் திரு. மூன் போப்பிடம் தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Top