Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சுற்றுப்பயணிகளுக்கு எல்லைகளைத் திறந்துவிடும் தென்கிழக்காசிய நாடுகள்

தென்கிழக்காசியாவில் மேலும் அதிகமான நாடுகள் அனைத்துலகப் பயணிகளுக்கு அவற்றின் எல்லைகளை மீண்டும் திறந்துவிடுகின்றன.

வாசிப்புநேரம் -

தென்கிழக்காசியாவில் மேலும் அதிகமான நாடுகள் அனைத்துலகப் பயணிகளுக்கு அவற்றின் எல்லைகளை மீண்டும் திறந்துவிடுகின்றன.

கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தால் நாடுகள் அவற்றின் எல்லைகளை மூடியிருந்தன.

இப்போது எல்லைகளைத் திறப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கிருமி போவதாகத் தெரியவில்லை.

அடுத்து எல்லைகளைத் திறந்துவிடுவதுபற்றி யோசிக்கவேண்டியதுதான் என்கின்றனர் நிபுணர்கள்.

அவசரப்படத் தேவையில்லை.. ஆனாலும் எல்லைகளைத் திறக்க ஆரம்பிக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

சிங்கப்பூர் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான சிறப்புப் பயண ஏற்பாட்டை அடுத்த வாரத்திலிருந்து மேலும் சில நாடுகளுக்கு விரிவுபடுத்துகிறது.

பக்கத்து நாடான மலேசியாவும் ஒருவழியாக எல்லைகளைத் திறந்துவிடுகிறது.

மலேசியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அடுத்த மாதம் வரவேற்கவும் அது தயாராகிறது.

அவர்கள் மலேசியா சென்றதும் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

தாய்லந்து, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படவிருக்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்