Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மார் அரசாங்கத்துக்குச் சொந்தமான 2 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை

மியன்மார் அரசாங்கத்துக்குச் சொந்தமான இரண்டு வர்த்தக நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.

வாசிப்புநேரம் -

மியன்மார் அரசாங்கத்துக்குச் சொந்தமான இரண்டு வர்த்தக நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.

Myanma Timber Enterprise, Myanmar Pearl Enterprise ஆகியவற்றைத் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இணைத்துள்ளது அமெரிக்கா.

அதன் மூலம், அந்த நிறுவனங்களின் அமெரிக்கச் சொத்துகள் முடக்கப்படுகின்றன. அமெரிக்கர்கள் அந்த இரண்டு நிறுவனங்களோடு வர்த்தகப் பரிவர்த்தனையில் ஈடுபடுவதும் தடை செய்யப்படுகிறது.

நவரத்தினக் கற்கள், மரங்கள் ஆகியவற்றின் வர்த்தகம் மியன்மார் ராணுவத்தின் முக்கியமான பொருளியல் ஆதாரமாய்த் திகழ்வதாக அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாட்டி ஆங் சான் சூச்சியின் (Aung San Suu Kyi) அரசாங்கத்தை அகற்றி, மியன்மார் ராணுவம் பிப்ரவரி முதல் தேதி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

அப்போதிருந்து மியன்மாரில் அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. ராணுவத்துக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், மியன்மார் ராணுவத்தின் வருமானத்தை முடக்கும் வகையில், அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்து வருகிறது.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்