Images
  • night clubs
    படம்: Bernama

மலேசியா: இரவு விடுதிகளில் COVID-19 விதிமுறைகளை மீறிய சுமார் 290 பேர் கைது

மலேசிய இரவு விடுதிகளில் கிருமிப் பரவல் தொடர்பான நடமாட்டக் கட்டுப்பாடுகளை மீறிய 294 பேரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வெவ்வேறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட 512 பேரில் அவர்களும் அடங்குவர்.

103 பேர் அதிகமானோர் கூடும் பெரிய அளவிலான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்ததாக அதிகாரிகள் கூறினர்.

56 பேர் தனியார் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்; 32 பேர் நிகழ்ச்சியிடங்களில் வருகையைப் பதிவுசெய்யத் தவறினர்; 14 பேர் முகக் கவசம் அணியவில்லை என்று கூறப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் செயல்பட்டது தொடர்பில் 8 குற்றங்கள் பதிவானதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Top