Images
  • twins

இரட்டைக் குழந்தைகளைச் சுமார் 11,000 வெள்ளிக்கு விற்ற தாய்

சீனா: இளம் தாய் ஒருவர் அவருக்குப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளைச் சுமார் 12,000 வெள்ளிக்கு விற்றுள்ளார்.

மா (Ma) என அழைக்கப்படும் அந்தச் சீனப் பெண்மணியால் குறைப்பிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. கணவரும் பெற்றோரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

ஆகையால், அவர் குழந்தைகளைச் சுமையாக கருதி அறிமுகம் இல்லாதவர்களிடம் விற்க முடிவெடுத்தார்.

இரண்டு வெவ்வேறு குடும்பங்களிடம் ஒரு மகனை சுமார் 8,000 வெள்ளிக்கும் மற்றொரு மகனை 3,000 வெள்ளிக்கும் விற்றார்.

அந்தப் பணத்தில் கடன்பற்று அட்டைக் கடனைச் செலுத்திவிட்டு, மீதமிருந்த தொகையில் புதிய கைத்தொலைபேசியையும் வாங்கினார்.

குழந்தைகளை வாங்கிய குடும்பங்களிடம் இருந்து அவற்றைத் திரும்பப் பெற்ற காவல்துறையினர், அந்தக் குழந்தைகளைத் தாய்வழி தாத்தா பாட்டியின் பொறுப்பில் ஒப்படைத்தனர்.

குழந்தைகளின் தாயையும், தந்தையையும் சீனக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

சீனாவின் சட்டப்படி குழந்தை கடத்தல் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். கடத்தப்பட்ட குழந்தைகளை வாங்கும் குடும்பங்களுக்கும் சட்டப்படி தண்டனை விதிக்கப்படும்.  

Top