Images
  • mouldy food (1)

பிள்ளைகளுக்கு அழுகிய உணவைக் கொடுத்த சீனப்பள்ளி

சீனாவின் செங்டூவில் பெயர்பெற்ற பள்ளி ஒன்று மாணவர்களுக்குக் கொடுக்க வைத்திருந்த உணவு, பூசனம் பூத்த நிலையில் இருந்ததைக் கண்ட பெற்றோர் பொங்கி எழுந்துள்ளனர்.

சீனாவின் செவென்த் எக்ஸ்பெரிமென்ட்டல் (7th Experimental) உயர்நிலைப் பள்ளி பூசனம் பூத்த ரொட்டியையும் அழுகிய இறைச்சியையும் கடலுணவையும் மாணவர்களுக்குச் சமைத்துக்கொடுத்க அதன் சமையலறையில் வைத்திருந்தது.

மரம் நடும் நிகழ்ச்சிக்காக பெற்றோர் பாள்ளிக்குச் சென்றபோது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தகவல் வெளிவந்ததும் கெட்டுப்போன உணவை பள்ளி நிர்வாகம் 2 வண்டிகளில் ஏற்றி அகற்ற முயன்றது.

கொந்தளித்த பெற்றோர் வண்டியை வழிமறித்துப் போராட்டம் நடத்தினர். சென்ற ஆண்டு நவம்பர் மாதம், சில பிள்ளைகளுக்கு வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் சில பெற்றோர் கவலை தெரிவித்தனர்.

சம்பவம் பள்ளிக்கு அவமானம் அளித்ததாகவும், நடந்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பள்ளி நிர்வாகம் அறிவித்தது.

அரசாங்கப் பள்ளிகளைப் போல் 20 மடங்குக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளியை இணையத்தில் கடுமையாகச் சாடிவருகின்றனர் பெற்றோர்.

 

Top