Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: மவுண்ட் கினாபாலு ஏறும் முயற்சியில் பெண்ணுக்குக் காயம்

மலேசியாவின் மவுண்ட் கினாபாலு (Mount Kinabalu) மலையில் ஏறும் முயற்சியின்போது விழுந்து காயமடைந்த பெண் மீட்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
மலேசியா: மவுண்ட் கினாபாலு ஏறும் முயற்சியில் பெண்ணுக்குக் காயம்

(படம்: AFP))

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மலேசியாவின் மவுண்ட் கினாபாலு (Mount Kinabalu) மலையில் ஏறும் முயற்சியின்போது விழுந்து காயமடைந்த பெண் மீட்கப்பட்டுள்ளார்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த 23 வயது வெண்டன் புரோவே இலியனுக்குத் (Vanden Broere Elien) தொடையில் ஏற்பட்ட காயத்தால் அவரை மீட்புக் குழு தூக்குப் படுக்கையில் கொண்டு சென்றது.

காயமடைந்த அந்தப் பெண், காலை சுமார் 10 மணிக்கு தீயணைப்பு, மீட்புக் குழுவுக்கு உதவி கேட்டு அவசர அழைப்பு விடுத்தார்.

பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்