Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானில் நடமாடும் பள்ளிவாசல்

வெளிப்புறத்தில் பார்க்க சாதாரண கனரக வாகனம் போல இருந்தாலும் உட்புறத்தில் 50 பேர் தொழுகை நடத்தக்கூடிய பள்ளிவாசலை உருவாக்கியுள்ளது ஜப்பானிய நிறுவனம் ஒன்று.

வாசிப்புநேரம் -
ஜப்பானில் நடமாடும் பள்ளிவாசல்

(படம்: AP)

வெளிப்புறத்தில் பார்க்க சாதாரண கனரக வாகனம் போல இருந்தாலும் உட்புறத்தில் 50 பேர் தொழுகை நடத்தக்கூடிய பள்ளிவாசலை உருவாக்கியுள்ளது ஜப்பானிய நிறுவனம் ஒன்று.

2020 ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஜப்பான் தயாராகும் வேளையில், முஸ்லிம் பயணிகளின் தேவைகளுக்கேற்ப நடமாடும் பள்ளிவாசல் உருவாக்கப்பட்டது.

அனைத்துலகச் சமூகத்தின் ஓர் அங்கமாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் ஜப்பானில் போதுமான பள்ளிவாசல்கள் இல்லாததைக் கண்டார் யாசு புரோஜெக்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.

அனைவரையும் வரவேற்கும் நாடாகத் திகழ விரும்பும் ஜப்பான் அதன் இஸ்லாமிய நண்பர்களுக்குச் சரியான உபசரிப்பு வழங்க விரும்பியதாகக் கூறினார் யசுஹாரு இனோயு.

25 டன் எடையுள்ள கனரக வாகனம் அதன் அகலத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. நடமாடும் பள்ளிவாசல் 48 சதுர மீட்டர் அளவுக்குப் பெரிதாக முடியும்.

நடமாடும் பள்ளிவாசலில் தொழுகைக்கு முன் கை கால்களைக் கழுவ இடமுண்டு. நான்காண்டுகளுக்கு முன் கத்தார் சென்ற போது நடமாடும் பள்ளிவாசலை உருவாக்கும் எண்ணம் தோன்றியதாக இனோயு கூறினார்.

ஜப்பானில் கிட்டத்தட்ட 200,000 முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

நடமாடும் பள்ளிவாசல் உலக அமைதிக்குப் பங்காற்ற வேண்டும் என்பது தமது விருப்பம் என்றார் இனோயு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்