Images
  • mrs sri lanka
    (படம்: AFP)

தலையிலிருந்து மகுடத்தைப் பிடுங்கிய 'Mrs World' கைது

இலங்கையில் 'Mrs Sri Lanka' அழகுராணிப் போட்டியின் வெற்றியாளரின் தலையிலிருந்து மகுடத்தைப் பிடுங்கிய 'Mrs World' துன்புறுத்தலுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) நடைபெற்ற 'Mrs Sri Lanka' போட்டியில் புஷ்பிக்கா டி சில்வா (Pushpika de Silva) வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர் தலையிலிருந்து கேரலைன் ஜூரி (Caroline Jurie) மகுடத்தைப் பிடுங்கினார்.

ஜூரி, அந்தப் போட்டியின் முன்னாள் வெற்றியாளர்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டி சில்வாவிற்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டது.

ஜூரியும் அவருடைய உதவியாளரும் துன்புறுத்தல், அரங்கத்திற்குச் சேதம் விளைவித்தல் ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூரி பொது மன்னிப்புக் கேட்டால் குற்றச்சாட்டுகளைக் கைவிடுவதாக டி சில்வா கூறினார்.

ஆனால் ஜூரி அதை மறுத்துவிட்டதாக அவர் சொன்னார்.

டி சில்வா விவாகரத்து ஆனவர் என்பதால், அவர் போட்டியில் வெற்றிபெறத் தகுதியில்லை என்று ஜூரி கூறியிருந்தார்.

- AFP

Top