Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

MRT நிலையத்தில் பெண்ணைத் தாக்கிய ஆடவர் தண்டனையைத் தவிர்க்க மொட்டை போட்டுக்கொண்டார்

மலேசியாவின் MRT நிலையத்தில் பெண்ணைத் தாக்கிய ஓர் ஆடவர் தண்டனையைத் தவிர்ப்பதற்கு மொட்டையடித்துக் கொண்டதாக அந்நாட்டுக் காவல் துறையினர் கூறியுள்ளனர். 

வாசிப்புநேரம் -
MRT நிலையத்தில் பெண்ணைத் தாக்கிய ஆடவர் தண்டனையைத் தவிர்க்க மொட்டை போட்டுக்கொண்டார்

(படம்: Bernama)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மலேசியாவின் MRT நிலையத்தில் பெண்ணைத் தாக்கிய ஓர் ஆடவர் தண்டனையைத் தவிர்ப்பதற்கு மொட்டையடித்துக் கொண்டதாக அந்நாட்டுக் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

அந்த 26 வயதுச் சந்தேக நபர் Gang 08 என்றழைக்கப்படும் குண்டர்கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்டது.

தன்னைக் காவல்துறையினர் தேடுவதையறிந்த அந்த ஆடவர் எந்நேரமும் வீட்டின் விளக்குகளை அணைத்தே வைத்திருந்ததாகக் கோலாலம்பூரின் தலைமைத் காவல்துறை அதிகாரி மஸ்லான் லஸிம் (Mazlan Lazim) குறிப்பிட்டார்.

அந்தச் சந்தேக நபர் தாமான் சேராஸில் (Taman Cheras) இருக்கும் தனது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

அவரின் வீட்டில் 19 கைத்தொலைபேசிகள், ATM அட்டைகள், ஓரிடத்திற்குள் அத்துமீறி நுழைவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்